சுவையான கடலை மாவு லட்டு செய்வது எப்படி??
எளிமையான முறையில் லட்டு செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: சர்க்கரை - 1 கப், கடலை மாவு - 1/2 கப், நெய் - 1/4 கப், ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து சர்க்கரை மற்றும் கடலை மாவை வறுக்கவும்.
சர்க்கரை மற்றும் கடலை மாவு சற்று வறுத்து வந்ததும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை உருண்டை பிடிக்கும் அளவிற்கு இருகியதும் இறக்கவும்.
பின்னர் இதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கி, கைப்பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருக்கவும்.
Social Media
பின்னர் கையில் நெய் தடவிக்கொண்டு லட்டுவை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும்.
Social Media
தேவைப்பட்டால் மேலே முந்திரி அல்லது பாதாம் வைத்து அளங்கரித்துக்கொள்ளவும்.
Social Media