கிரிஸ்பீ ஆனியன் சமோசா வீட்டிலேயே செய்வது எப்படி??

அனைவருக்கும் பிடித்தமான கிரிஸ்பீ ஆனியன் சமோசா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.

Social Media

தேவையான பொருட்கள்: மைதா - 3 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர், உப்பு, எண்ணெய்

உள்ளே வைக்க: வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 1, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் வைக்கவும்.

அடுத்து கடாய் எடுத்து அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

Social Media

பிசைந்து வைத்துள்ள மாவை வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை வைத்து சமோசா வடிவில் மடித்துக்கொள்ள வேண்டும்.

Social Media

மடிப்பு பிரிந்துக்கொள்ளும் என அச்சப்பட்டால் தண்ணீர் அல்லது மைதா கரைச்சலை கொண்டு ஒட்டிக்கொள்ளவும்.

Social Media

செய்து வைத்த சமோசா மடிப்புகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுடச்சுட ஆனியன் சமோசா ரெடி.

Social Media