பிரியாணி சொதப்புதா? Perfect பிரியாணிக்கு இதோ சீக்ரெட் டிப்ஸ்!!

வீட்டில் செய்யும் பாசுமதி அரிசி பிரியாணி சொதப்பாமல் உதிரி உதிரியாய் டேஸ்ட்டா வர இதோ இருக்கு உங்களுக்காக சில டிப்ஸ்....

Social Media

பாசுமதி அரிசியை பிரியாணிக்கு வேகவைக்கும் போது 20 நிமிடங்களுக்கு முன்பு கழுவிவிட்டு ஊற வைக்க வேண்டும்.

பாசுமதி அரிசியில் பிரியாணி செய்யும் போது அரிசியை தனியாகவும் மசாலா தனியாகவும் வேகவைக்க வேண்டும்.

பிரியாணிக்கு பாசுமதி அரிசியை விட 8 - 10 மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அரிசியை சேர்க்க வேண்டும்.

1 : 2 என்கிற கணக்கை நினைவில் வைத்துக்கொள்ளவும். அதாவது 1/2 கி அரிசிக்கு 1/4 கி வெங்காயம்.

பிரியாணிக்கு எப்போதும் லாங் - கிரெய்ன் பாசுமதி அரிசி தேர்வு செய்யவும். அதிலும் பழைய அரிசியாக இருந்தால் சூப்பர்.

Social Media

தம் போடும் போது குறைந்த தீயே போதுமானது. ஆனால் பாத்திரத்தின் எல்லா பக்கத்திலும் சீராக சூடு பரவ வேண்டும்.

Social Media

பிரியாணி மசாலா ஃபிரஷ்ஷாக அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.

Social Media