ஆப்ப மாவு தயார் செய்வது எப்படி?
ஆப்ப மாவு எப்படி தயார் செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3 கப், உளுந்தம் பருப்பு – முக்கால் கப், ஒரு முழு தேங்காய் துருவியது, பழைய சாதம் – 1 கப்
செய்முறை : பச்சரி மற்றும் உளுந்தை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சரி, உளுந்து 4 மணி நேரம் ஊறிய பிறகு, அதை கிரைண்டரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், பழைய சாதம் சேர்த்து அரைக்கவும்.
தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக்கொண்டு மாவை மைய அரைக்காமல் அதற்கு முன்பாக இருக்கும் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Social Media
இந்த மாவை ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்க வேண்டும். மறு நாள் மாவு பொங்கிய பதத்திற்கு வந்ததும் ஆப்பம் சுட மாவு ரெடி.
Social Media
ஆப்பத்திற்கு தேவையான அளவு மாவை எடுத்து, கொஞ்சம் தண்ணீராக கரைத்து உப்பு சேர்த்து வழக்கம் போல் ஆப்பம் சுடலாம்.
Social Media