வீடுகளில் கிருமி இல்லாத வகையில் பராமரிப்பது பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மை காக்கும். வீட்டை எளிய முறையில் சுத்தமாக வைத்திருப்பது எப்படி என பார்க்கலாம்.
Pixabay
தினசரி வீட்டின் அனைத்து பகுதிகளையும் கூட்டி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.
வாரம் ஒருமுறையாவது தண்ணீரால் வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தண்ணீரில் கிருமிநாசினி பவுடர் அல்லது லிக்விட் பயன்படுத்துவது பாக்டீரியாக்களை அழிக்கும்.
டைல்ஸ் தரையை பளபளப்பாக வைத்திருக்க பேக்கிங் சோடா, வினிகர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
Pixabay
அதிகம் தூசி தங்கும் இடுக்குகள், சீலிங் ஃபோன் போன்றவற்றை அடிக்கடி துடைக்க வேண்டும்.
Pixabay
வளர்ப்பு பிராணிகளை வீட்டிற்குள் விடும் பழக்கம் இருந்தால் அவற்றை அடிக்கடி குளிப்பாட்டி சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
திரை சீலைகள், தலையணை, சோபா கவர், மெத்தை கவர் போன்றவற்றை மாதம் ஒருமுறையாவது சலவை செய்ய வேண்டும்.
பொருட்களை அலங்கோலமாக போடாமல் முறையாக அடுக்கி வைத்தால் அவற்றில் பல்லி, கரப்பான் அடைக்கலமாவது தடுக்கப்படும்.