தினசரி நடைபயிற்சி செல்வது எடை குறைப்பது மட்டுமல்லாமல், உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும். நடைபயிற்சியை பேருக்கு செய்யாமல் முறையாக செய்ய வேண்டும். அது எப்படி என காண்போம்.
Various source
நடைபயிற்சியின்போது வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும். எடை குறைக்கவும் உதவும்.
சமதள பரப்பில் நடப்பதை விட உயரமான பகுதிகளை நோக்கி நடப்பது கலோரிகளை எரிப்பதுடன் மூட்டு இணைப்புகளை வலுப்படுத்துகிறது.
உடல் எடை குறைக்க இல்லாமல் உடல் சுறுசுறுப்பாக இருக்க நடப்பவர்கள் குறுகிய நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுதல் போதுமானது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினசரி 10 ஆயிரம் அடிகள் என கணக்கிட்டு நடக்கலாம்.
Various source
நடைபயிற்சி மேற்கொள்ளும்போது ஹெட்போனில் பாடல்கள் கேட்டபடி நடப்பதை தவிர்ப்பது நல்லது.
Various source
நடக்கும்போது உடன் நடப்பவர்களுடன் பேசிக் கொண்டே நடப்பதை தவிர்ப்பது நல்லது.
வயதானவர்கள் அதிக தூரம் நடப்பதை தவிர்த்து குறுகிய தூரங்களுக்கு மெல்ல நடந்து பயிற்சி செய்யலாம்.