உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
Various Source
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.
யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.
இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.
யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
Various Source
மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம்.
Various Source
மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.
யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்
யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.