சுவையான சத்தான கேழ்வரகு தோசை சுடுவது எப்படி?

தானிய வகைகளில் மிகவும் சத்துமிக்கது கேழ்வரகு. கேழ்வரகை வைத்து லட்டு, தோசை, இட்லி என பல பதார்த்தங்களை செய்ய முடியும். சுவையான கேழ்வரகு தோசை சுடுவது குறித்து பார்ப்போம்.

Instagram

தேவையானவை; கேழ்வரகு மாவு, உளுந்து பருப்பு, வெந்தயம், உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.

கேழ்வரகை நன்கு காய வைத்து சற்று கரகரப்பான மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தை 3 மணி நேரம் வரை ஊற வைத்து பின்னர் அதனுடன் வெந்தயம் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த உளுந்து, வெந்தயம் கலவையை கேழ்வரகு மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

Instagram

தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 6-8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

Instagram

பின்னர் தோசை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழக்கமாக தோசை ஊற்றுவது போல ஊற்றி எடுக்கலாம்.

கேழ்வரகு மாவு கலவையுடன் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்தால் தோசைக்கு கூடுதல் சுவையை அளிக்கும்.