ஆயுத பூஜைக்கு அவல் கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி?
ஆயுத பூஜை என்றாலே அவல் வைத்து செய்யப்படும் உணவுகள் வெகு பிரபலம். வழக்கமாக அவல் பொறியை மட்டும் செய்யாமல் அவலை வைத்து சுவையான பொங்கலை எளிதாக செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various Source
தேவையான பொருட்கள்: அவல் – 2 கப், கல்கண்டு – 1 கப், முந்திரி சிறிதளவு, 6 டீஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி,
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நெய் விட்டு முந்திரி, அவலை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
முந்திரியை முழுதாக போடாமல் இரண்டாக உடைத்து போட்டால் நேய் சேர்ந்து சீக்கிரம் வறுபடும்.
பிறகு அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக விட வேண்டும்.
Various Source
கற்கண்டை ரவை அளவு பொடியாக அரைத்து வெந்த அவலுடன் சேர்த்து கிளற வேண்டும்.
Various Source
பிறகு மீதமுள்ள நெய்யை சேர்த்து ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அவல் கல்கண்டு பொங்கல் தயார்.