உளுந்து வடை சுட்டு எடுப்பது எப்படி??

உளுந்து வடை மொருமொருப்பாக வர அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக பருப்பை ஊறவைத்தால் போதும்.

Webdunia

ஒரு கப் உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி பச்சரிசி அல்லது துவரம்பருப்பை சேர்த்து ஊறவைக்கலாம்.

ஊறிய பருப்பை மைய்ய அரைக்காமல் கொஞ்சம் கொறகொறப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதில் சோடா உப்பு போட்டு நன்கு கிளறவும். சோடா உப்பு வடை ஆறினாலும் கெட்டியாகாமல் மிறுதுவாக வைத்திருக்கும்.

Webdunia

பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

Webdunia

மாவுக் கலவை அதிக நேரம் ஊறாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் வெங்காயம் நீர்த்து போய்விடும்.

Webdunia

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வடையின் இருபுறத்தையும் இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்.

எண்ணெயின் சூடும் வடை மொரு மொருப்புக்கு முக்கிய காரணம். எனவே அதிலும் கவனம் தேவை.