முடி உதிர்வை குறைப்பது எப்படி?

ஆண், பெண் என்று இல்லாமல் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி கொட்டுதல்.

Pexels

முடி உதிர்வுக்கு வைட்டமின்கள் பி12 & டி, பயோட்டின் மற்றும் இரும்புச் சத்து போன்ற சில அடிப்படை ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாகும்.

நமது உணவு பழக்க வழக்கம் மற்றும் நடைமுறை பழக்கவழக்கங்கள் முடி கொட்டுவதற்கு காரணம் என்று கூறப்படுவது.

முடி கொட்டுதலுக்கு ஏசியில் பல மணி நேரம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஏசியில் அதிக நேரம் இருந்தால் கூந்தல் நுனியில் வெடிப்பு பொடுகு தொல்லை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வாரத்திற்கு மூன்று நாட்கள் தயிரை தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

Pexels

வாரத்திற்கு 1 முறை கொத்தமல்லி ஜூஸை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வு குறையும்.

Pexels

கற்றாழை ஜூஸை முடியின் வேரில் தடவி நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவ முடி உதிர்வு குறையும்.

Pexels

சின்ன வெங்காயச் சாறை தலையில் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் வரை ஊற வைத்து கழுவினால் முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான முடியை பெறலாம்.

Pexels