மன அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்ப்பது எப்படி?

மன அழுத்தம் மனிதருக்கு பல உடல் நல பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. முக்கியமாக இதய நோய்கள். பணிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து மீண்டு மாரடைப்பை தவிர்த்து கொள்வது எப்படி என காண்போம்.

Pixabay

கடன் பிரச்சினைகள், பணி சுமை, தனிமை உள்ளிட்ட பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழி செய்கிறது.

தினசரி காலை அமைதியான சூழலில் அமர்ந்து தியானம் செய்வது அன்றைய நாளை அமைதியாக கையாள உதவும்.

பதட்டமான சமயங்களில் மூச்சை மெல்ல இழுத்து விட்டு மூச்சு பயிற்சி செய்வது பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

Pixabay

தனிமை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது நல்லது.

Pixabay

மன அழுத்தம் ஏற்படுத்தும் பணிகள், ஃபோன், கணினி பயன்பாட்டிற்கு வாரத்தில் ஒரு நாளாவது விடுப்பு அளிப்பது நல்லது.

ஒவ்வொரு நாளும் எளிதான வேலைகள் முதல் கடினமான வேலைகள் வரை பட்டியலிட்டு அதை செய்து வருதல் நலம்.

மன அழுத்தத்தை குறைக்க நமக்கு நாமே முக்கியத்துவம் அளித்தல் அவசியம். நமது உடல், மன நலனை என்றும் மனதில் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்.