பழங்களை எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதுனு தெரியுமா?

பழங்கள் உடலுக்கு பல நன்மைகளை கொடுத்தாலும் அதை சாப்பிடக்கூடாத வகையில் எடுக்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.

Pexels

அந்த வகையில் பொதுவாகவே பழங்களை எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

பழத்தை எப்போதும் தனியாக சாப்பிடுவது சிறந்தது. பழங்களை மற்ற உணவுகளுடன் சாப்பிட வேண்டாம்.

இரவு தூங்க செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் எந்த வித உணவையும் தவிர்ப்பது நல்லது, குறிப்பாக பழங்களை தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தின் pH அளவு சமநிலையற்றதாக மாறும். எனவே பழங்களை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூடாது.

தோலோடு சாப்பிடக்கூடிய பழங்களை தோலோடுதான் சாப்பிட வேண்டும். அதனை அகற்றக்கூடாது.

பழங்களில் சுவைக்காக உப்பு அல்லது சாட் மசாலா சேர்க்காமல் பச்சையாக சாப்பிடுவது சிறந்தது.

Pexels