தினசரி எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?

உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பற்களை நன்கு துலக்குவது மிக அவசியமான அடிப்படையான ஒன்றாகும்.

Webdunia

ஒவ்வொரு மூன்று முறை உணவுக்குப் பிறகும் பல் துலக்குவது ஒரு நல்ல நடைமுறையாகும். ஆனால் அது எப்போதும் சாத்தியமானதல்ல.

எனவே மூன்று வேலை இயலாவிட்டாலும் காலையிலும், இரவு உறங்கச் செல்லும் முன்பும் பல் துலக்கும் பழக்கத்தை வைத்துக் வேண்டும்.

இரவு உணவுக்கு பின் பல் துலக்கியதும் வேறு எந்த உணவையும் சாறுகளையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

Webdunia

அதிக எண்ணிக்கையிலான மக்கள் 45 வினாடிகளில் பல் துலக்குகிறார்கள். ஆனால் குறைந்தது 2 நிமிடங்களாவது பல் துலக்க வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Webdunia

45 வினாடிகள் துலக்குவதை விட இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்குவது 26 சதவீதம் அதிக கிருமிகளை அழிக்கிறது என கூறப்படுகிறது.

Webdunia

பல் துலக்கும் பிரஷ் நன்றாக இருந்தாலும் அதனை கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

Webdunia

அதேபோல தினமும் காலை எழுந்ததும் வெறும் தண்ணீரில் வாய் கொப்புளித்த பிறகே பல் துலக்க வேண்டும்.

Webdunia

பல் துலக்கி 10-15 நிமிடங்களுக்குப் பிறகு மவுத்வாஷ்களைப் பயன்படுத்த வேண்டும். 3-5 டீஸ்பூன் மவுத்வாஷை குறைந்தது 30 - 45 வினாடிகள் வாயில் சுழற்ற வேண்டும்.

Webdunia