சூடான சுவையான நூடுல்ஸ் கிச்சடி செய்யலாம் வாங்க!

இந்த காலக்கட்ட குழந்தைகள் நூடுல்ஸை பெரிதும் விரும்புகின்றனர். இந்த நூடுல்ஸை காய்கறிகள் சேர்த்து சுவையான நூடுல்ஸ் கிச்சடியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பர். நூடுல்ஸ் கிச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: ஒரு கப் வெங்காயம், 1 கப் உருளைக்கிழங்கு, 1 கப் கேரட், தக்காளி -1, 1 கப் பச்சை பட்டாணி

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய், மஞ்சள் தூள், துறுவிய தேங்காய், வறுத்த வேர்கடலை, உப்பு தேவையான அளவு

வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும்.

Various source

காய்கறிகள் வெந்த பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து, பின்னர் நூடுல்ஸ் சேர்த்து கிளற வேண்டும்.

Various source

பின்னர் உப்பு தேவையான அளவு சேர்த்து, வாசத்திற்கு கொத்தமல்லி இலை நறுக்கி போட வேண்டும்.

இறுதியாக தேங்காய் துறுவலை தூவி, வேர்க்கடலை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான நூடுல்ஸ் கிச்சடி தயார்.