பொடுகுத் தொல்லையைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Social Media
சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் கலவையை மசாஜ் செய்யவும். சுமார் 10-15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் தலைக்கு குளிக்கவும்.
வழக்கமான ஷாம்புவில் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து, முடியில் தடவவும். 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் உங்கள் தலைமுடியை அலசவும்.
உச்சந்தலையில் உட்பட தலைமுடியில் தயிர் தடவவும். ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் உலர விடவும், பின்னர் குளிக்கவும்.
வேப்பம்பூ மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீரை ஆற விடவும். இதனை தலைமுடியைக் கழுவ பயன்படுத்தவும்.
வழக்கமான ஷாம்புவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து உங்கள் தலைமுடியில் தடவவும். மெதுவாக மசாஜ் செய்யவும். 2 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உலர்ந்த கூந்தலில் முட்டையின் மஞ்சள் கருவை தடவி ஒரு மணி நேரம் பிளாஸ்டிக் பையால் மூடி வைக்கவும். ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவவும்.
கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி, அரை மணி நேரம் விட்டு, ஷாம்பூவால் தலையை அலசவும்.
ஒரு கப் குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை கலக்கி 2 - 5 நிமிடம் விட்டு ஷாம்பு போட்டு அலசவும்.