மூட்டு வீக்கத்தை போக்கும் எளிய வீட்டு மருத்துவம்..!

வயதான காலத்தில் பலரையும் பெரும்பாலும் படுத்தி எடுக்கும் பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி. வீட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்கள் சிலவற்றை கொண்டே மூட்டுவலியை குணப்படுத்த முடியும்.

Various Source

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு சம அளவில் சேர்த்து அரைத்து இளம்சூட்டில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், வலி குறையும்.

விளக்கெண்ணையை சுட வைத்து ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் கலந்து குடித்தால் மூட்டுவலி குறையும்.

மூக்கிரட்டை வேரை நன்கு கசக்கி அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து இருவேளை குடித்து வர மூட்டுவலி குணமாகும்.

கணப்பூண்டு இலைகளை வேப்ப எண்ணெய்யின் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டு வீக்கம் குணமாகும்.

Various Source

எருக்கஞ்செடி இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களில் கட்டி வர வீக்கம் குறையும்.

Various Source

இஞ்சி சாறில் நல்லெண்ணெய் கலந்து மூட்டுகளில் மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி சரியாகும்.

அமுக்கரா இலை மற்றும் வேர் சம அளவு எடுத்து அரைத்து பற்று போட்டு வர மூட்டு வலி, வீக்கம் குணமாகும்.