பொடுகு தொல்லை நீங்க எளிமையான மருத்துவ குறிப்புகள்..!

நீளமான அடர்த்தியான கூந்தலை பெற விரும்புவோருக்கு பொடுகு பிரச்சினையாக இருந்து வருகிறது. தலை அழகை கெடுக்கும் பொடுகை நீக்க எளிமையான மருத்துவ வழிகளை காணலாம்.

Various Source

தலையில் பொடுகு நீங்க தயிரை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊர வைத்து குளிக்கலாம்.

வெள்ளரியை சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி 15 நிமிடம் கழித்து அலச வேண்டும்.

பாசிப்பயறில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து அரைத்து தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்பிலையை பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆறிய பின் தலையில் தடவி குளித்து வர பொடுகு நீங்கும்.

Various Source

சாதம் வடித்த கஞ்சியை ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு விரைவில் மறையும்.

Various Source

எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை சரியாகும்.

எலுமிச்சை சாரை தனியாக தலையில் தடவவோ, ஊற வைக்கவோ கூடாது.