மாவு சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க சில டிப்ஸ்!
வீட்டில் அரிசி மாவு, கோதுமை மாவு என பல மாவு வகைகளை வாங்கி வைக்கும் நிலையில் அவை கெட்டுப்போவதும், பூச்சிகள் வருவதும் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு மாவு சீக்கிரம் கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.
மாவுப் பொருட்களில் கொஞ்சமாக ஈரம் சேர்ந்தாலும் அவை பூஞ்சைகள் வந்து கெட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.
அதனால் மாவை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைப்பது அவசியம்.
டப்பாவின் மூடி லூசாக இருந்தால் ஒரு பிளாஸ்டிக் கவரால் பாட்டிலின் வாயை மூடி அதன் மேல் மூடியை வைத்து மூட வேண்டும்
மாவு வைத்துள்ள டப்பாக்களை அதிக ஈரப்பதம் இல்லாத அறைவெப்பநிலை உள்ள இடங்களில் பாதுகாப்பகா வைக்க வேண்டும்
Various source
மாவு பொருட்கள் உள்ள டப்பாக்கள், பாத்திரங்களில் சூரிய ஒளி படுவதை தவிர்க்கும்படி வைப்பது நல்லது
Various source
மாவை பத்திரமாக சேமித்து வைக்க பிளாஸ்டிக் டப்பாவோ, அல்லது உலோகமோ எதுவாக இருந்தாலும் தரமான, காற்று புகாத பாத்திரமாக இருத்தல் வேண்டும்.