அரிசி வகைகளில் பாரம்பரியமான வகைகளில் ஒன்று வரகு அரிசி. வரகரிசியை கொண்டு இட்லி, பொங்கல் என பலவிதமான உணவு வகைகளை செய்யலாம். வரகரிசியை கொண்டு பொங்கல் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: வரகு அரிசி – 1 கப், பாசிப் பருப்பு – கால் கப், ஓம தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு தேவையான அளவு
வறுக்க : நெய், நறுக்கிய இஞ்சி, மிளகு, சீரகம், முந்திரி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம்,
ஒரு கடாயில் நெய் விட்டு வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து தயார் செய்து கொள்ளவும்.
பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து தாளித்தவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் வரகு அரிசி, பாசிப்பருப்பை நெய் சேர்த்து வறுத்து ஓம தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும்.
வேக வைத்த வரகரிசி, பாசிப்பருப்புடன் தாளித்தவைகளை சேர்த்து நெய் சேர்த்து மிதமான சூட்டில் கிளறினால் சூப்பரான வரகரிசி பொங்கல் தயார்