சத்துமிக்க ப்ரோட்டீன் சுண்டல் செய்வது எப்படி?

பயிறு உள்ளிட்ட தானியங்களில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான ப்ரோட்டீன் சுண்டல் செய்வது குறித்து பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை, துருவிய கேரட், வெள்ளரி, உப்பு, கொத்தமல்லி

காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், தனியா தூள், கடலை பருப்பு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து ஆறிய பின்பு மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும்.

பயிறுகளை 4 மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பயிறு மற்றும் தானியம் வெந்த பிறகு அதை இறக்கி அதில் ஏற்கனவே செய்து வைத்த பொடியை தூவ வேண்டும்.

அதன்மேல் நறுக்கிய கேரட், வெள்ளரி, மல்லி தழையை தூவி பரிமாறினால் தானிய சுண்டல் தயார்.

தானிய சுண்டல் செய்ய முளைக்கட்டிய பயிறுகளை பயன்படுத்தினால் கூடுதல் சுவையும், சத்தும் கிடைக்கும்.

Various Source