அதிகரிக்கும் இதய நோய்கள்! காத்துக் கொள்வது எப்படி?

இதய நோய்களிலிருந்து காத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Pixabay

இந்தியாவில் அதிகமான மாரடைப்பு மரணங்கள் பதிவாகின்றன. 25 வயது இளைஞர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதய நோய்களிலிருந்து காத்துக் கொள்ள உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடிப்பது அவசியமானதாக உள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.

பழுப்பு அரிசி, பார்லி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட தானியங்களை சாப்பிடுவது நல்லது

வெண்ணெய், பனீர், பாலாடைக்கட்டி, நெய், சிவப்பு இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

Pixabay

இறைச்சியில் தோல் இல்லாத கோழி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.

Pixabay

கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்பு இறைச்சிகளை சாப்பிடுவது, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Pixabay

அதிக அளவு உப்பு எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அதேசமயம் உப்பை அதிகமாக குறைத்தால் சோடியம் குறைபாடு ஏற்படும். இதில் மருத்துவ நிபுணரின் வழிகாட்டல் அவசியம்.

கொழுப்பு இல்லாத பால் பொருட்கள், கொட்டைகள், பருப்பு வகைகளை சாப்பிடலாம்.