வெண் பூசணி ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

உணவுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளை பூசணிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இந்த பூசணிக்காயை ஜூஸாக குடித்து வந்தால் என்ன நன்மை என்பதை அறிவோம்.

Various Source

பூசணிக்காயில் விட்டமின் பி, ஏ, தாது சத்துக்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குறைந்து உடலுக்கு நன்மை பயக்கும்.

நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

கோடைக் காலங்களில் வெள்ளை பூசணி ஜூஸ் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.

Various Source

வெள்ளை பூசணி ஜூஸ் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க உதவுகிறது.

பூசணி ஜூஸில் உள்ள குளிர்ச்சி தன்மை வாத, பித்த பிரச்சினைகளை குணமாக்க உதவுகிறது.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.