வலிமையை அள்ளித்தரும் வரகு அரிசி பற்றி தெரியுமா?

அன்றாட உணவில் அரிசி, கோதுமையை தாண்டி சிறுதானிய உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதில் மிகவும் அவசியமானது வரகு அரிசி

Various Source

புரதச்சத்து, நல்ல கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில் அதிகம் உள்ளது.

வரகு அரிசியில் உள்ள அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றை காக்கவும் வரகு அரியில் உள்ள அமினோ அமிலங்கள் உதவுகின்றன.

வரகு அரிசி காரத்தன்மை உடையது என்பதால் எளிதில் செரிமானம் ஆகும். அதனால் செரிமானக்கோளாறு உள்ளவர்கள் சாப்பிடலாம்.

வரகு அரிசியில் உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரகு கஞ்சியை உணவாக அளிக்கலாம்.

Various Source

வரகு அரியில் உள்ள விட்டமின் பி உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.

Various Source

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மூட்டுவலி, உடல் வலியை வரகு அரிசி உணவு தடுக்கிறது.

Various Source

வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சரியான உணவு இது.