அயோடின் உப்பு vs கடல் உப்பு - எது சிறந்தது??

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் அயோடின் உப்பு மற்றும் கடல் உப்பு இவற்றில் சிறந்தது எது என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

அயோடின் உப்பை விட கடல் உப்பே சிறந்தது என கருதப்படுகிறது. இது தரும் நன்மைகள் இதோ...

கடல் உப்பில் மெக்னீசியம் மற்றும் சல்பர் போன்ற இரசாயனங்கள் உள்ளன. மேலும், 90க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.

கடல் உப்பை தண்ணீரில் சேர்த்து குடிப்பதன் மூலமோ, சாப்பிடுவதன் மூலமோ அல்லது குளிப்பதன் மூலமோ நல்ல பலன்களைப் பெறலாம்.

இதனை பயன்படுத்துவதன் மூலம் தசைப்பிடிப்பு பிரச்சனை நீங்கும். செரிமான பிரச்சனைகளுக்கு இது சரியான தீர்வாகும்.

உங்களுக்கு தொண்டை புண் இருந்தால், கடல் உப்பு சரியான சிகிச்சை அளிக்கிறது. வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஈறுகளுக்கு நல்லது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க கடல் உப்பு பயன்படுத்தவும். கடல் உப்பு உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.