சகல நன்மைகளை அளிக்கும் சாமை அரிசி..!

தானிய வகைகளில் நிறைவான சத்துமிக்க ஒன்று சாமை அரிசி. சைவ உணவு விரும்பிகளுக்கு புரதம் நிறைந்த உணவு சாமை. சாமை அரிசியின் அற்புதமான நன்மைகள் குறித்து காண்போம்..

Various Source

சாமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் பி, பி6 உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.

சாமை உண்ணும்போது செரிமானத்தை மிதப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

சாமையில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளுக்கு வலுவை தந்து எலும்பு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.

நாள் ஒன்றுக்கு தேவையான இரும்புச்சத்தில் மூன்றில் ஒரு பங்கை சாமை அளிப்பதால் ரத்த சோகையை தடுக்கிறது.

Various Source

எளிதில் செரிமானம் ஆகும் சாமை அரிசி மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் குணமாக்கும்.

சாமை அரிசி உணவு பெண்களுக்கு மாதவிடாய் கால கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

Various Source

சாமை அரிசி உணவு எடுத்துக் கொள்வதால் ஆண்களின் உயிர் உற்பத்தி திறன் கூடி ஆண்மைக் குறைவு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.