கோடை வெயிலில் காக்கும் கிர்ணி பழ ஜூஸ்!

கோடை காலத்தில் உடல் வெப்பம் தணிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் முக்கியமான பழச்சாறுகளில் ஒன்று கிர்ணி அல்லது முலாம்பழம் ஜூஸ். இதன் அற்புத நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

Various Source

கிர்ணி அல்லது முலாம்பழத்தில் விட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன.

கிர்ணி ஜூஸ் உடல் வெப்ப நிலையை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

கிர்ணி பழம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோடை கால நோய்களில் இருந்து காக்கிறது.

மலச்சிக்கல் உள்ளவர்கள் முலாம்பழ ஜூஸ் குடித்தால் மலமிளக்கியாக செயல்படும்.

Various Source

கிர்ணியில் உள்ள நீர்ச்சத்து உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து உஷ்ணத்திலிருந்து காக்கிறது.

Various Source

கிர்ணி ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க இது நல்ல ஜூஸ்

முலாம்பழம் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது.