நலம் பல அள்ளித்தரும் முருங்கை கீரை..!

முருங்கை மரத்தின் காயை போல கீரையும் உணவுப் பொருளாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பல உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது.

Various Source

முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை ஏற்படுவதுடன் நரம்பு தளர்ச்சியையும் போக்கும்.

முருங்கை கீரையை உப்புடன் வேகவைத்து சாப்பிட்டு வர மூட்டுவலி பிரச்சினைகள் தீரும்.

முருங்கை கீரையுடன் மஞ்சள், பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வர வாயு கோளாறுகள் நீங்கும்.

முருங்கை கீரையில் உள்ள விட்டமின் ஏ சத்தானது கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

Various Source

முருங்கை இலையை அரைத்து வீக்கங்களில் பற்று போட்டு வர வீக்கம் சரியாகும்.

முருங்கை கீரையுடன் 10 மிளகு சேர்த்து சாப்பிட்டு வர இரத்த சோகை பிரச்சினை குணமாகும்.

முருங்கை இலைச்சாறில் தேன் கலந்து காலை, மாலை அருந்தி வர ரத்த அழுத்தம் குறையும்.