நண்டு சாப்பிட்டால் என்னென்ன பயன்கள்..?

பொதுவாக கடல் உணவுகள் அரிதான பல ஊட்டச்சத்துகளை வழங்கக் கூடியவை. அவற்றில் நண்டு முக்கியமான உணவு. நண்டை முறையாக சமைத்து சாப்பிட்டால் ஏராளமான மருத்துவ நன்மைகளை அளிக்கிறது.

நண்டு இறைச்சியில் கால்சியம், புரதச்சத்து, விட்டமின் ஏ, பி12, ஒமேகா 3, ஜின்க் ஆகிய ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

நண்டு உணவில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளதால் எடைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல உணவு.

நண்டு இறைச்சியில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பீடா கரோடின் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.

நண்டு உணவில் உள்ள செலேனியம் அணுக்களை பாதுகாப்பதோடு, தாம்பத்திய உணர்வை தூண்டி செயல்பட வைக்கிறது.

நண்டில் உள்ள ஒமேகா 3 உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய பாதுகாப்பை அளிக்கிறது.

நண்டு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நண்டில் உள்ள விட்டமின் பி12 கண், தோல் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும், பாதுகாப்பாக இருக்கவும் உதவுகிறது.