திகட்டாத தேங்காய் பூவின் அற்புதமான பயன்கள்!

தேங்காயிலிருந்து பெறப்படும் தேங்காய் பூவானது இளநீர், தேங்காயை விட அதிகமான சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக விளங்கும் தேங்காய் பூவின் பயன்களை அறிவோம்.

Various Source

முற்றிய தேங்காய்க்குள் வளரும் குருத்து தேங்காய் பூ எனப்படுகிறது. இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

தேங்காய் பூவில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகமாக உள்ளதால் தோல் சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

கோடைக்காலங்களில் ஏற்படும் சிறுநீரகக்கல் பிரச்சினையிலிருந்து தேங்காய் பூ காக்கிறது.

தேங்காய் பூ நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ப்ரீ ரேடிக்கல்ஸை நீக்குவதால் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து காக்கிறது.

Various Source

தேங்காய் பூவில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த குழாயில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

Various Source

தேங்காய் பூவில் உள்ள காப்பர், இரும்புச்சத்து, ஜிங் ஆகியவை உடலில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது.

தேங்காய் பூ உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.