வாரத்தில் ஒரு முறை பாகற்காயை சாப்பிட்டு பாருங்க!!

கசப்பு சுவை கொண்டிருப்பதால் பலரால் ஒதுக்கப்படும் காயாக உள்ள பாகற்காயில் உள்ள நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Social Media

பாகற்காயில் நார்ச்சத்து, வைட்டமின் A, C, ஃபோலேட் , பொட்டாசியம், ஜின்க், அயர்ன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆய்வு தரவுகளின் படி பாகற்காய் வயிறு, குடல்பகுதி மற்றும் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாகற்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமின்றி சீறான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது.

பாகற்காய் முகப்பருக்களை தடுத்தல், வயதான தோற்றம் ஏற்படுவதை மெதுவாக்குதல் போன்றவற்றை சருமத்தில் செய்கிறது.

பொடுகு தொல்லை, முடி உதிர்தல் போன்றவற்றை தடுக்கவும் பாகற்காய் பயன்படுகிறது.

Social Media

ஆய்வுகளில் பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவு மற்றும் ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.

Social Media

பாகற்காயில் உள்ள குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

Social Media