கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அருமையான இயற்கை வழிகள்!

உடலில் கண் மிகவும் அவசியமான ஒரு உறுப்பாக இருக்கிறது. உடலில் பல்வேறு பாதிப்புகள், உடல்சூடு போன்றவை கண்ணையும் பாதிக்கக் கூடும். வருமுன் காப்போம் என்ற வழியில் கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க இயற்கை மருத்துவ வழிகள் சில

Various source

கண் ஆரோக்கியத்திற்கு அருகு, ஆமணக்கு, எலுமிச்சை, கடுக்காய், கரிசாலை, கற்றாழை ஆகியவை நல்ல மருந்துகளாகும்.

இரண்டு துண்டு வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் 10 நிமிடங்கள் வைத்துக் கொள்வது நல்லது.

சிறுகீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர கண்கள் பிரகாசம் அடையும்.

சாதம் வடித்த கஞ்சியில் உப்பு போட்டு குடித்து வர கண் எரிச்சல் நீங்கி குளுமை அடையும்.

Various source

பனை மர வேரை நீரில் வெட்டிப் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி நாளுக்கு 3 வேளை குடித்து வர கண் ஆரோக்கியம் மேம்படும்.

கல்யாண முருங்கை இலைகளை வதக்கி சாப்பிட்டு வர கண் பிரச்சினைகள், நீர் வடிதல் குணமாகும்.