ரத்த சர்க்கரை அளவை குறைக்க சூப்பரான உடற்பயிற்சிகள்!

ரத்த சர்க்கரை பலருக்கும் தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்காக மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதுகுறித்து காண்போம்.

Pixabay

தினசரி சிறிது தூரம் சைக்கிளிங் செல்வது ரத்த சர்க்கரையையும், அதனால் ஏற்படும் மூட்டு வலியையும் கட்டுப்படுத்த உதவும்.

உடல் அசைவுகள், தியானம் மற்றும் மூச்சு பயிற்சி இணைந்த டாய்ச்சி பயிற்சி ரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.

நீச்சல் பயிற்சி உடல் உள்ளுறுப்புகளை ஆக்டீவாக இயங்க வைத்து சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.’

ஏரோபிக் டான்ஸ் போன்ற பயிற்சிகளில் செய்யும் உடல் அசைவுகள் ஆக்டிவாக உடலை வைத்துக் கொள்ள உதவுகிறது.

Pixabay

பளு தூக்குதல் பயிற்சிகள் கலோரிகளை குறைப்பதுடன் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

Pixabay

மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கும் யோகா பயிற்சிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிறந்த ஒன்று.

சில வகை உடற்பயிற்சிகளை தகுந்த உடற்பயிற்சி நிபுணர்கள் உதவியுடன் செய்ய வேண்டும்.