சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட கூடாத உணவுகள்!
சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும், அதிலும் குறிப்பாக காலை உணவில் அதி கவனம் தேவை.
Pexels
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இதோ...
செரில் - காலை உணவாக இவற்றை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக ஓட்ஸை இரவு நேரத்தில் நீரில் ஊற வைத்து காலை சாப்பிடலாம்.
பழச்சாறுகள் - காலை உணவாக சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடும்.
யோகர்ட்டுகள் - சுவையூட்டப்பட்ட மற்றும் ப்ளேவர்டு யோகர்ட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் காலை உணவாக இதனை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
பேன்கேக் - மைதா, மாப்பிள் சிரப், வெண்ணெய், முட்டை கொண்டு தயாரிக்கப்படும் இவை சர்க்கரை நோயாளிகளுக்கு மோசமான காலை உணவு.
Pexels
ஸ்மூத்தி - இவற்றில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகளும், குறைவான புரோட்டீன்களும் உள்ளன. எனவே ஸ்மூத்தியை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கனும்.
Pexels
அரிசி - சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
Pexels