பொதுவாக மீதமாகும் உணவு பொருட்களை மறுநாள் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கும் உள்ளது. சில உணவுகளை மறுநால் சூடு பண்ணி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிப்பதாய் அமையலாம். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Pixabay
சாதம் மீந்து போனால் அதை ஃப்ரிட்ஜில் வைத்தோ, மறுபடி சூடு பண்ணியோ சாப்பிடவே கூடாது.
கீரைகளில் இரும்புச்சத்து உள்ளது. ஆனால் திரும்ப சமைக்கும்போது கீரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.
ஒருமுறை சமைத்த எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்சினைகளை உருவாக்கும்.
சிக்கன், மட்டன் உள்ளிட்ட கறி வகைகளை ஒருமுறை சமைத்து அப்போதே சாப்பிட்டு விட வேண்டும்.
Pixabay
கறி வகைகளை மறுநாள் வைத்து சூடு செய்து சாப்பிட்டால் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Pixabay
உருளைக் கிழங்குகளை ஒருமுறை வறுத்து விட்டால் அப்போதே சாப்பிட்டு விட வேண்டும். மறுநாள் வைத்து சாப்பிடக் கூடாது.
புரதச்சத்து நிறைந்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி அல்லது மறுநாள் வைத்து சாப்பிட்டால் அது குடல் அலற்சியை ஏற்படுத்தலாம்.