மூட்டுவலி இருந்தா இதையெல்லாம் அறவே தொடாதீங்க!

சமீப காலமாக பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலருக்கு மூட்டுவலி, கீழ்வாத பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை உள்ளவர்கள் எதையெல்லாம் சாப்பிடவே கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

Various Source

கீழ்வாதம், மூட்டுவலி பிரச்சினைகளை தவிர்க்க அன்றாட உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மூட்டுவலி உள்ளவர்கள் மது அருந்துவதால் மூட்டுவலி மேலும் அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்ப்பது மூட்டுவலி நோயாளிகளுக்கு நல்லது.

சர்க்கரை ரத்த குளுக்கோஸை அதிகரித்து மூட்டு வலியை மோசமாக்கும் என்பதால் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.

Various Source

மைதா, கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகளில் உள்ள பசையம் மூட்டு வலியைம் அதிகப்படுத்தலாம்.

Various Source

மூட்டுவலி உள்ளவர்கள் தக்காளி, உருளை, கத்தரிக்காயை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக அறிவுரைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.