அன்றாட உணவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும் அசைவ உணவில் மீன் முக்கியமானது. ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு வகை ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Instagram
கட்லா மீன் அதிக எடைக் கொண்டது. இதில் அதிகமாக உள்ள சல்பர் மற்றும் ஜிங்க் சத்துக்கள் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
திரை வாளை எனப்படும் சால்மன் மீனில் அதிகளவிலான அமினோ ஆசிட், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 நிறைத்துள்ளது.
அயலா மீனில் செறிவான ஒமேகா 3, விட்டமின் டி மற்றும் செலினியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சங்கரா மீனில் ப்ரோடீன் நிறைவாகவும், மெர்குரி குறைவான அளவிலும் உள்ளது. எடை குறைக்க சிறந்தது
Instagram
வஞ்சிரம் மீனில் ப்ரோட்டீன், ஒமேகா 3, விட்டமின் ஏ, டி, பி6 ஆகியவை நிறைவாக உள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
Instagram
மத்தி மீனில் உள்ள அதிகமான DHA நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
கெளுத்தி மீனில் நியூட்ரியண்ட்கள், விட்டமின் பி12, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உள்ளது. உடல் எடை குறைக்க, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.