சூப்பரான சுவையான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?

காய்கறிகளில் செய்யும் ஊறுகாய் போல மீன், இறால் போன்றவற்றில் செய்யப்படும் ஊறுகாயும் மிகவும் சுவையானவை. மீன் ஊறுகாய் சுவையானது மட்டுமல்லாமல் நீண்ட நாள் கெடாமல் வைத்து பயன்படுத்த முடியும். கடற்கரையோர ஊர்களில் மீன் ஊறுகாய் மிகவும் பிரபலம்.

Various source

தேவையான பொருட்கள்: முள் இல்லாத மீன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி, இஞ்சி, பூண்டு, வினிகர், உப்பு, கடுகு, கறிவேப்பிலை

அரைக் கிலோ முள் இல்லாத மீனை கழுவி ஈரத்தன்மை இல்லாமல் உலர்த்தி அதனுடன் 4 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற விடவும்

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தயாரித்த மீன் துண்டுகளை நன்றாக பொறித்துக் கொள்ள வேண்டும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, பூண்டை வதக்க வேண்டும்.

அதனுடன் வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி பொறித்த மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

மீன் துண்டுகள் உடையாமல் மிதமான சூட்டில் கிளறி விட வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து அரை கப் வினிகர் சேர்த்து இறக்கி ஆற வைத்தால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

Various source