சில நிமிடங்களில் ஸ்னாக்ஸ் செய்வதற்கு உகந்தவற்றில் காலிஃப்ளவரும் ஒன்று. சூடான சுவையான காலிஃப்ளவர் (கோபி) 65 சில நிமிடங்களில் செய்வது எப்படி என பார்க்கலாம்.
Instagram
காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, மஞ்சள் போட்டு அதில் காலிஃப்ளவர் துண்டுகளை போட வேண்டும்.
இதனால் காலிஃப்ளவரில் புழுக்கள் இருந்தால் போய்விடும். பின்னர் காலிஃப்ளவர் துண்டுகளை எடுத்து ஆற வைக்க வேண்டும்.
தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, இஞ்சி, பூண்டை நன்றாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
Instagram
இந்த கலவையில் காலிஃப்ளவரை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
Instagram
பின்னர் எண்ணெய் சட்டியில் எண்ணெய்யை நன்றாக கொதிக்க விட்டு காலிஃப்ளவர் துண்டுகளை விட்டு பொறித்து எடுக்கவும்.
பொறித்து எடுத்த காலிஃப்ளவர் 65-ல் வெட்டிய வெங்காயம், எலுமிச்சை சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.