சமையலில் ப்ரோ-வாக மாற வேண்டுமா? இதோ சில குக்கிங் டிப்ஸ்!
இட்லி பூப்போல மென்மையாக வர ஒரு கைப்பிடி அவலை 10 நிமிடம் ஊற வைத்து இட்லி மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
Social Media
போலி செய்யும் போது கடலை பருப்பை வறுத்து சேர்த்தால் போலி ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
பஜ்ஜி செய்யும் போது தக்காளி, புதினா அரைத்து சேர்த்தால் புதுவித சுவையுடன் இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்யும் போது அதில் வேர்கடலையை வறுத்து பொடி செய்து சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
ரசம் வைக்கும் போது புளிப்பு அதிகமாகிவிட்டல் சிறுது வெல்லம் சேர்த்து புளிப்பை சரி செய்யலாம்.
டிபன் சாம்பார் செய்யும் போது வெறும் கடாயில் வெந்தயம், சீரகம் வறுத்து பொடித்து சாம்பார் இருக்கும் போது சேர்த்தால் சுவை கூடும்.
Social Media
உளுந்து வடை செய்யும் போது அதனுடன் சிறிதளவு இட்லி மாவு சேர்த்தால் வடை அதிக எண்ணெய் குடிக்காது.
Social Media
மட்டன் நன்றாக பஞ்சுபோல் வேக அதனுடன் சிறு பப்பாளி துண்டை போட்டு வேகவைக்கவும்.
Social Media
சாதத்தை வெள்ளையாகவும் உதிரி உதிரியாகவும் வடித்து எடுக்க அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகளை தண்ணீரில் போடவும்.
Social Media
வெண்டைக்காய் சமைக்கும் போது எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்தால் கொழகொழப்பு தன்மை இருக்காது.
Social Media