காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

உலர் பழங்களில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க போதுமான ஊட்டச்சத்தை எடுக்க வேண்டும். அதனால்தான் காலையில் முடிந்தவரை உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும். இவற்றின் பயன்களை தெரிந்து கொள்வோம்.

Various source

பாதாம்: 10 பாதாம் சாப்பிடுவதால் தினசரி வைட்டமின் ஈ தேவையில் 50% கிடைக்கிறது.

பிஸ்தா: பிஸ்தாவில் நம் வயிற்றுக்கு நன்மை செய்யும் உணவு நார்ச்சத்து உள்ளது. இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

வால்நட்ஸ்: மூளைக்கு ஆரோக்கியமானது. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

முந்திரி: முந்திரியில் ஜீரோ கொலஸ்ட்ரால் உள்ளது. அதனால் இதயத்திற்கு பாதிப்பில்லை.

பேரீச்சம்பழம்: உலர் பேரீச்சம்பழத்தை நெய்யில் வறுத்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

வால் நட்ஸ்: இவற்றை சாப்பிட்டால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை குறைக்கலாம்.

திராட்சை: இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வழங்குவதால், இவற்றை உட்கொள்வதால் இரத்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.