கருணைக் கிழங்கு சாப்பிட்டால் அரிப்பு ஏற்படுமா?

கிழங்கு வகைகளில் ஒன்றான கருணைக் கிழங்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. அதேசமயம் இதை சரியாக சமைத்து உண்ணாவிட்டால் பிரச்சினைதான். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Various source

கருணைக் கிழங்கில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரை ஆகியவை மிகக் குறைந்த கலோரிகளுடன் நமக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன.

ஒரு சிறிய கருணைக் கிழங்கின் மூலம் சுமார் 6 கிராம் நார்ச்சத்து நம் உடலை சென்றடைகிறது.

கருணைக் கிழங்கு சாப்பிடுவதால் உடல் பருமன், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

இது புற்றுநோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Various source

கருணைக் கிழங்கின் பச்சை இலைகளை சுத்தமாக கழுவி சூப் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

Various source

இளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் பெண்கள் மற்றும் புரதம் S குறைபாடு உள்ளவர்கள் கருணைக் கிழங்கு சாப்பிடக்கூடாது.

கருணைக் கிழங்கை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் நாக்கில் அரிப்பை ஏற்படுத்தும்.