சூயிங்கம் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

தினசரி சூயிங்கம் மெல்வது பலருக்கு பழக்கமாக உள்ளது. சில வகைகளில் சூயிங்கம் நல்லது என்றாலும் தொடர்ந்து மெல்லுவது பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

Pixabay

பல்வேறு வண்ணங்களில், சுவைகளில் கிடைக்கும் சூயிங்கம்களை வாங்கி மெல்லுவது பலரிடையே பழக்கமாக உள்ளது.

வாய் துர்நாற்றம் போக்கவும், உமிழ்நீர் அதிகம் சுரக்கவும் சூயிங்கம் மெல்லுவது உதவுகிறது.

தொடர்ந்து சூயிங்கம் மெல்லுவது சில உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அடிக்கடி சூயிங்கம் மென்று வருவதால் தாடை மூட்டுகள் விரைவில் தேய்வடைகின்றன.

Pixabay

சூயிங்கம் அதிகமாக சாப்பிடும்போது அதன் சர்க்கரை பல் இடுக்குகளில் உள்ள பாக்டீரியாக்களை தூண்டுவதால் பல் சொத்தை ஏற்படுகிறது.

Pixabay

சூயிங்கம்மை பலர் தெரியாமல் விழுங்கிவிடுவதும், அறுவை சிகிச்சைகள் செய்து அதை நீக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

சூயிங்கம் அதிகம் மென்றால் கன்னங்களில் உள்ள ‘மெல்லுதசை’ பெரிதாகி சதுரமான முகத்தோற்றம் அமைந்து விடும்.