கேல் கீரை பற்றி தெரியுமா?

கீரை வகைகளே ஆரோக்கியமிக்கவைதான். இருப்பினும், இந்த கேல் கீரையில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.

Pexels

கேல் கீரையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதனை சூப்பர் ஃபுட் என்று அழைக்கின்றனர்.

காலிஃப்ளாவர், கோஸ் ரகங்களை போன்றது இந்த கேல் கீரை. பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடைக்கும்.

சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கப் கேல் கீரையில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவில் 5 கி நார்ச்சத்து, 15% கால்சியம், வைட்டமின் பி6, 40% மக்னீசியம், 180% வைட்டமின் ஏ, 200% வைட்டமின் சி மற்றும் 1020% வைட்டமின் கே ஆகியவை இருக்கின்றன.

Pexels

மேலும் வைட்டமின் ஈ, இரும்பு சத்து, துத்தநாகம், ஃபோலேட் ஆகியவையும் குறைந்த அளவில் இருக்கின்றன.

Pexels

இதில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை என்றும் இளமையாக இருக்க உதவுகிறது.

Pexels

கேல் கீரையில் கலோரி குறைவு என்பதால் கெட்ட கொழுப்பு சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

Pexels