வீட்டில் அன்றாடம் சமைக்கும் பாத்திரங்களை கழுவுவது பெரும் வேலை. பாத்திரங்களை கழுவ பலர் சோப்பு, டிஷ்வாஸ் திரவங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கெமிக்கல்கள் கொண்டு பாத்திரம் கழுவலாமா என்பது குறித்து பார்ப்போம்.
Various Source
பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் டிஷ்வாஸ் பார் சோப்புகள், லிக்விடுகளில் கெமிக்கல் கலவை உள்ளது.
சோப்பு கொண்டு பாத்திரங்களை கழுவும்போது சரியாக கழுவாவிட்டால் அவை பாத்திரத்தில் படிந்து விடலாம்.
மறுபடி அதே பாத்திரத்தில் சமைக்கும்போது அவை உணவுகளில் கலக்கும் வாய்ப்பு உள்ளது.
சிலர் பாத்திரங்களை கழுவ துணி சோப்புகளை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு துணி சோப்புகளை பயன்படுத்துவதால் அவற்றின் கெமிக்கல் மற்றும் உப்புகள் பாத்திரத்தில் படியும் வாய்ப்புள்ளது.
சோப்பு பார்களை விட லிக்விட் வாஷர்கள் பாத்திரங்களை கழுவ சிறந்தது. இவை சோப்பு கலவை போல பாத்திரத்தில் அதிகமாக படியாது.
சோப்பு அல்லது லிக்விட் எதை கொண்டு பாத்திரத்தை கழுவினாலும் நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.