பொதுவாக ரசம் என்றாலே அதில் காய்கறிகள் இருக்காது. ஆனால் காய்கறிகள் போட்டு செய்யும் சுவையான ரசமும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். சுவையான வெஜிடபிள் ரசம் வைப்பது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையானவை: கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மிளகு, சீரகம், பூண்டு, புளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு
கேரட், பீன்ஸ், காளிஃப்ளவரை பொடிப்பொடியாக நறுக்கி நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தேக்கரண்டி சீரகம், மிளகு எடுத்து பூண்டுடன் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் இடித்து வைத்த சீரக, மிளகு கலவையை சேர்க்க வேண்டும்
Various Source
மசாலாவை நன்றாக வதக்கியபின் வேக வைத்த காய்கறிகளை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
Various Source
பின்னர் அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு கொதி வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் மணமணக்கும் வெஜிடபிள் ரசம் தயார்.