நெய் மணக்கும் வெஜ் புலாவ் சாதம் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்!

நெய் சாதம் என்றும் புலவு சாதம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு நல்ல வாசமான சுவையான உணவு வகையாகும். எளிய முறையில் வீட்டிலேயே சுவையான புலவு சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி, நெய், பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு,

வாணலியில் நெய் விட்டு முந்திரி, உலர் திராட்சை, பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரியாணி இலை, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

அதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைக்க வேண்டும்.

இரண்டு விசில் வந்ததும் இறக்கி அதனுடன் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை, வெங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்னர் இறுதியாக கொத்தமல்லி இலைகளை மேலே தூவினால் நெய் மணக்கும் சுவையான புலாவ் தயார்.