சுவையான சிறுதானிய பொங்கல் செய்யலாம் வாங்க!

திணை, வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை தரக்கூடியவை. இந்த சிறுதானியங்களை கொண்டு சுவையான பொங்கல் எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: திணை, வரகு, சாமை, குதிரைவாலி கலந்து 1 டம்ளர், பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், முந்திரி, நெய், கறிவேப்பிலை

திணை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை இரவே ஊற வைத்து தயார் செய்துக் கொள்ள வேண்டும்.

பாசிப்பருப்பை கழுவி 10 நிமிடம் வரை ஊறவைத்து அதை சிறுதானியங்களுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் இட்டு மூடி வேகவைக்க வேண்டும்.

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலையை தாளித்துக் கொள்ள வேண்டும்.

Various source

சிறுதானிய கலவை வெந்து குழைந்து வந்ததும் நெய் ஊற்றி ஏற்கனவே தாளித்து வைத்திருந்த பொருட்களை சேர்த்து கிளற வேண்டும்.

தயாரான சிறுதானிய பொங்கலுக்கு தேங்காய் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.