ருசியான ஷாஹி துக்கடா வீட்டிலேயே செய்யலாம்!

இனிப்பு உணவுகளில் வட பிராந்தியங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ஷாஹி துக்கடா. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: பால், மில்க் ப்ரெட், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா, ஏலக்காய், குங்குமப்பூ, நெய்

கனமான பாத்திரம் ஒன்றை வைத்து 1 லிட்டர் பாலை ஊற்றி அரை கப் சர்க்கரை சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி ப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைக்கப் சர்க்கரைக்கு அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்

ஒரு வாணலியில் நெய் விட்டு மில்க் ப்ரெட்டை முக்கோணமாக வெட்டி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various source

வறுத்த பிரட் துண்டுகளை தயார் செய்து வைத்த சர்க்கரை பாகில் ஊற விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

அதன் மேல் ப்ரிட்ஜில் வைத்த பால் ரெபடியை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன்மேல் சிறு துண்டுகளாக வெட்டிய பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை தூவி விட்டால் சுவையான சாஹி துக்கடா தயார்.