குழந்தைகளுக்கு சத்துமிக்க கேழ்வரகு மில்க் ஷேக் செய்யலாமா?
தற்போதைய குழந்தைகள் பல நவீன உணவுகளையே விரும்புகின்றனர். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்க தரமான உணவுகளை புதிய புதிய முறையில் வழங்க வேண்டியது அவசியம். சத்து மிகுந்த கேழ்வரகு மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: கேழ்வரகு, பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, காய்ச்சிய பால், நாட்டு சர்க்கரை,
பாதாம், முந்திரி, திராட்சை மற்றும் பேரீச்சையை பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கேழ்வரகு முதல் நாள் இரவே ஊற வைத்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் நீர் விட்டு வடித்துக் கொள்ளவும்.
வடித்து எடுத்த கேழ்வரகு பாலை 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
Various source
அதனுடன் அரைத்த பாதாம் கலவை, கொஞ்சம் பால், ஏலப்பொடி சேர்த்து காய்ச்சவும்
Various source
பின்னர் அதில் நாட்டு சர்க்கரை கலந்து இறக்கினால் சுவையான ஆரோக்கியமான கேழ்வரகு மில்க் ஷேக் தயார்.
சுவைக்கு மில்க் ஷேக் மேல் பெர்ரி பழங்கள், முந்திரி, திராட்சை தூவி சாப்பிடலாம்.